‘அறிவு’ சிவகார்த்திகேயன் ‘ஆதி’ ஃபகத் ஃபாசில் – ஜெயிப்பது யார்

‘ரீமேக் ராஜா’ என்று அனைவராலும் சொல்லப்பட்டு வந்த இயக்குனர் ராஜா ‘தனி ஒருவன்’ என்ற ஒரே படத்தின் மூலம் ‘’நான் ரீமேக் ராஜா மட்டும் இல்லை மோகன் ராஜா என்ற சிறந்த இயக்குனர்’’ என்பதை நிரூபித்தார். தற்போது அதே ‘தனி ஒருவன்’ போன்றே சமூக அக்கறை சார்ந்த ஆக்ஷன் படமான ‘வேலைக்காரன்’ படத்தையும் இயக்கி முடித்துள்ளார். சிவகார்த்திகேயன், நயன்தாரா, ஃபகத் ஃபாசில், பிரகாஷ் ராஜ், சதீஷ், ரோபோ ஷங்கர் என்று நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கும் இந்தப் படம் செப்டம்பர் 29 ஆம் தேதி ரிலீஸாகிறது.

இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் ‘அறிவு’ என்ற கேரக்டரிலும், ஃபகத் ஃபாசில் ‘ஆதி’ என்ற கேரக்டரிலும் நடித்துள்ளார்களாம். சேரிப்பகுதியில் வாழும் அனாதையான சிவகார்த்திகேயன் கார்ப்பரேட் திமிங்கலமான ஃபகத் ஃபாசிலை எப்படி ஜெயிக்கிறார் என்பதே கதையாம். நயன்தாரா மிருனாளினி என்ற கேரக்டரில் நடித்துள்ளார்.

 

You might also like More from author