‘சந்திரமுகி’யாக மாறிய சமந்தா

பொதுவாக ஹீரோயின்கள் என்றாலே அதாவது முன்னணி ஹீரோயின்கள் என்றாலே மீடியாக்களிடமோ அல்லது தனது உதவியாளர்களிடமோ  எரிந்து விழுவார்கள் என்று ஒரு பேச்சு திரையுலகில் இருக்கிறது. ஆனாலும் சில ஹீரோயின்கள் மட்டும் அதிக உணர்ச்சிவசப்படவோ கோபம் கொள்ளவோ மாட்டார்கள். அவர்களில் ஒருவர்தான் சமந்தா. ஆனால் இந்த சமர்த்து சமந்தாவையோ சந்திரமுகியாக கோபமுகம் காட்ட வைத்திருக்கிறார்கள் மீடியாக்காரர்கள்.

நாக சைதன்யாவுடன் திருமணம் செய்துகொள்ளவிருக்கும் சமந்தா ‘’திருமணத்திற்கும் பிறகும் நான் சினிமாவில் நடிப்பேன்’’ என்று பல முறை கூறிவிட்டார். இந்த நிலையில் சில நாட்களுக்கும் முன் சமந்தாவிடம் ‘’திருமணத்திற்குப் பிறகும் நீங்கள் நடிப்பைத் தொடர்வீர்களா…?’’ என்று கேள்விகேட்ட மீடியாவிடம் ‘’இதே கேள்விக்கு நான் எத்தனை முறைதான் பதில் சொல்வது…? இதே கேள்வியை நீங்கள் ஒரு டாக்டரிடம் கேட்பீர்களா…?’’ என்று கொந்தளித்துவிட்டாராம்.

You might also like More from author

%d bloggers like this: