தனுஷுடன் நடிக்க ஆசைப்படும் புதுமுக நாயகி!

‘வீரா’ படத்தின் மூலம் அறிமுகமாகவிருக்கும் ஐஸ்வர்யா மேனன் நடிகர் தனுஷுடன் நடிக்க விரும்புவதாக கூறியுள்ளார்.

சமீபத்தில்  பேட்டி ஒன்றில் நடிகை ஐஸ்வர்யா மேனன் பேசுகையில், ‘தமிழ் திரையிலகில் நான் பலரை முன்மாதிரியாக எடுத்துக் கொள்வேன். புதிதாக வரும் அனைவருக்கும் விடாமுயற்சி, பொறுமை, கடின உழைப்பும் நிறைய தேவை என கருதுகிறேன். ஆனால், நடிகர் தனுஷ், திரையில் வெளிப்படுத்தும் தனித்துவமிகுந்த நடிப்பினால் பெரிதும் ஈர்க்கப்பட்டு இருக்கிறேன். அவருடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன்’ என்று கூறியுள்ளார்.

சில தமிழ்ப்படங்களில் துணை கதாப்பாத்திரங்களில் நடித்துள்ள ஐஸ்வர்யா மேனன், தற்போது ‘வீரா’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிறார். ராஜாராமன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘வீரா’ படத்தில் கிருஷ்ணா, ராஜேந்திரன், யோகி பாபு உள்ளிட்டோர் இணைந்து நடித்துள்ளனர்.

அறிமுகமாகும் முதல் படத்திலேயே வலுவான கதாப்பாத்திரம் அமைந்திருப்பதாகவும், சில தமிழ்ப் படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் நடிகை ஐஸ்வர்யா மேனன் தெரிவித்துள்ளார்.

You might also like More from author

%d bloggers like this: