நான்கு படங்களுக்கு விருது நன்றியை பதிவு செய்த விமல்

தமிழக அரசு அறிவித்துள்ள ஆறு ஆண்டுகளுக்கான விருதுகள் அறிவிப்பில் நடிகர் விமல் நடித்த ‘பசங்க’, ‘களவாணி’, ‘வாகை சூட வா’, ‘மஞ்சப் பை’ என நான்கு படங்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதனால் மகிழ்ச்சி அடைந்த விமல் தனது நன்றியை பதிவு செய்திருக்கிறார்.

”2009-ம் வருடத்தின் சிறந்த படமாக பசங்கபடமும், 2010-ம் வருடத்தின் இரண்டாவது சிறந்த படமாக களவாணிபடமும் 2011-ம் வருடத்தின் சிறந்த படமாக வாகை சூடவாபடமும் சிறந்த படங்களுக்கான விருது பெற்றிருக்கின்றன. மேலும் 2014-ம் வருடத்திற்கான சிறந்த இயக்குநருக்கான விருது மஞ்சப்பைபட இயக்குனர் ராகவனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

எனது திரையுலக வாழ்க்கையில் மிக முக்கியமான இந்த நான்கு படங்களிலும் நானும் ஒரு அங்கமாக இருந்திருக்கிறேன் என்பதை நினைத்து மகிழ்ச்சியுடன் பெருமையும் அடைகிறேன்.

மேலும் வாகை சூடவாபடத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான விருது எனக்கு வழங்கப்பட்டுள்ளது எனது மகிழ்ச்சியையும் எனது பொறுப்பையும் இன்னும் அதிகரித்துள்ளது. இன்னும் நல்ல படைப்புகளில் கவனம் செலுத்தவேண்டும் என்கிற ஊக்கத்தை இந்த விருது எனக்கு ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு முழு காரணமான எனது இயக்குநர்களான பாண்டிராஜ், சற்குணம் மற்றும் ராகவன் ஆகியோருக்கு எனது நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். மற்றும் விருதுபெற்ற சக கலைஞர்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்

எனக்கு ஆரம்பகாலம் தொட்டு ஆதரவு அளித்துவரும் அனைவருக்கும் இந்த நேரத்தில் என் நன்றியை தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்என்று விமல் தெரிவித்துள்ளார்.

You might also like More from author