தமிழக அரசின் மீது வருத்தத்தில் இயக்குனர் சுசீந்திரன்

‘’இனி வயசுக்கு வந்தா என்ன வரலைன்னா என்ன’’ என்று சிலர் நக்கல் அடிக்குமளவுக்கு எட்டு வருடங்கள் கழித்து தமிழ் திரைப்படங்களுக்கு விருதுகள் அறிவித்துள்ளது தமிழக அரசு. 2௦௦9 முதல் 2௦14 வரை ஆறு ஆண்டுகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டிருக்கின்றன. இந்த விருது விவகாரத்தில் ஏகப்பட்டக் குழப்பங்களும் குளறுபடிகளும் இருப்பது போல இருக்கிறது இயக்குனர் சுசீந்திரனின் அறிக்கை.

‘’நீண்ட வருடங்களுக்கு தமிழ்த் திரையுலகிற்கு விருதுகள் அறிவித்துள்ள தமிழக முதல்வருக்கு நன்றி. என்னுடைய படங்கள் எந்த விருதிற்கும் தேர்வு செய்யப்படாததிற்கு தேர்வுக் குழுவிற்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தேசிய விருது பெற்ற ‘அழகர்சாமியின் குதிரை’, எல்லோராலும் பாராட்டுப் பெற்ற ‘நான் மகான் அல்ல’ படத்தின் க்ளைமாக்ஸ் காட்சிக்கு சண்டைப் பயிற்சியாளர் அனல் அரசு தேர்வு செய்யப்படாதது எனக்கு மிகுந்த ஆச்சரியத்தை அளிக்கிறது. விருதுகள் பெறவிருக்கும் எனது நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்’’ என்று தன் வருத்தங்கலந்த கோபத்தைப் பதிவு செய்திருக்கிறார்.

You might also like More from author

%d bloggers like this: