த்ரிஷாவுடன் ஊர் சுற்றும் விஜய் சேதுபதி

நயன்தாரா, தமன்னா என பெரிய ஹீரோயின்களுடன் நடித்துவிட்ட விஜய் சேதுபதி தற்போது த்ரிஷாவுடன் ‘96’ என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். ஒளிப்பதிவாளரான பிரேம் குமார் முதல் முறையாக இந்தப் படத்தில் இயக்குனராக அறிமுகமாகிறார். இவர் ஏற்கனவே விஜய் சேதுபதி நடித்து மிகப் பெரிய ஹிட்டான ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தின் ஒளிப்பதிவாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதுவரைக்கும் விஜய் சேதுபதி நடிக்கும் படங்களின் லொக்கேஷன்கள் மிகக் குறைவாகவே இருக்கும். ஆனால் ‘96’ படத்தில் மட்டும் படத்தின் தலைப்புக்கேற்றவாறு ‘96’ லொக்கேஷன்களில் படப்படிப்பு நடத்தப்படுகிறது. அந்தமான், குலுமனாலி, ஜெய்ப்பூர், கோல்கொண்டா போன்ற பல இடங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்டிருக்கிறதாம். உருக வைக்கும் காதல் கதையாக உருவாகி வருகிறது ‘96’.

You might also like More from author