‘’விஷாலுடன் நடிக்க வாய்ப்பு வந்தால்…?’’ சரத்குமார் அதிரடி பதில்

சென்ற வருட நடைபெற்ற நடிகர் சங்க தேர்தலில் சரத்குமார் தரப்பிற்கும், விஷால் தரப்பிற்கும் கடுமையான மோதல் ஏற்பட்டது. விஷால் தரப்பை சரத்குமார் அணியினர் கடுமையாக விமர்சித்தனர். ஆனால் தேர்தலில் விஷால் தரப்பே ஜெயித்தது. அதிலிருந்து விஷால், சரத்குமார் இருவருமே தனிப்பட்ட முறையில் கூட பேசிக் கொள்வதில்லை என்று கூறுகிறார்கள்.

சமீபத்தில் திரைப்படங்களில் விஷாலுடன் இணைந்து நடிப்பீர்களா என்ற கேள்விக்கு சரத்குமார், “தனிப்பட்ட முறையில் விஷாலுக்கு எதிராக எதுவும் இல்லை. ஆனால் கரும்புள்ளி போல ஒன்று உருவாகிவிட்டது. நான் ஏதோ பெரிய எதிரி போலவும், கொடுமைப்படுத்தியது போலவும், பெரிய தப்பு செய்தது போலவும் உருவாக்கப்பட்டுவிட்டது.

எங்கேயாவது பார்த்தால் பரஸ்பரம் வாழ்த்திக் கொள்வதில் பிரச்சினையில்லை. ஆனால் அவருடன் இணைந்து நடிப்பேனா என்று எனக்குத் தெரியாது. உண்மையாகச் சொல்ல வேண்டுமென்றால், நாளை வாய்ப்பு வந்தால், ஏன் செய்யக் கூடாது என்றெல்லாம் கேட்க மாட்டேன். ஏன் என்றுதான் கேட்பேன்” என்று தெரிவித்துள்ளார் சரத்குமார்.

இவர் நடிப்பேன்னு சொல்றாரா… இல்ல நடிக்க மாட்டேன்னு சொல்றாரா…?

You might also like More from author