‘கஜினி’ அசின், ‘துப்பாக்கி’ காஜல் வரிசையில் ‘ஸ்பைடர்’ ராகுல் ப்ரீத் சிங்

பொதுவாக இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் எடுப்பது எல்லாமே ஆக்ஷன் த்ரில்லர் படங்கள்தான். இந்தப் படங்களில் ஹீரோவிற்கு எவ்வளவு முக்கியத்துவம் இருக்கிறதோ அதே அளவிற்கு வில்லனுக்கும் இருக்கும். அதேபோலத்தான் அவர் எல்லாப் படங்களிலும் ஹீரோயினுக்கும் முக்கியத்துவம் கொடுத்திருப்பார். வெறுமனே ஹீரோவுடன் டூயட் பாடும் ஹீரோயினாக அல்லாமல் கதைக்கு துணைபுரியுமாறு ஹீரோயின் கேரக்டரை படம் முழுக்க வருமாறு திரைக்கதை அமைத்திருப்பார்.

உதாரணமாக ‘கஜினி’ படத்தில் அசினும், ‘துப்பாக்கி’ படத்தில் காஜல் அகர்வாலும் படம் முழுக்க வந்து ரகளைப்படுத்தியிருப்பார்கள். இதனால் இருவருக்குமே ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்புக் கிடைத்தது. இந்த வரிசையில் இடம் பெறப்போவர்தான் ராகுல் பரீத் சிங். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் ‘ஸ்பைடர்’ படத்தில் மகேஷ் பாபுவிற்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்தப் படத்தில் ஹீரோ மகேஷ் பாபு, வில்லன் எஸ்.ஜே.சூர்யா அளவிற்கு ராகுல் பரீத் சிங் கேரக்டரும் பேசப்படும் அளவிற்கு அவரது கேரக்டருக்குப் படத்தில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறதாம்.

You might also like More from author