கிருஷ்ணாவிற்குக் குவியும் ‘பண்டிகை’ வாழ்த்துகள்

இயக்குனர் விஷ்ணு வர்தனின் தம்பியும், தயாரிப்பாளர் பட்டியல் சேகரின் இளைய மகனுமான கிருஷ்ணா நடித்த முதல் படமான அலிபாபா நல்ல படமாக இருந்தும் ஓடாமல் போனது. அடுத்த வந்த சில படங்கள் சோடை போனாலும் கழுகு கவனிக்க வைத்தது. யாமிருக்க பயமேன் தைரியத்தைக் கொடுத்தது. ஆனாலும் ஒரு முழு ஹீரோவாக வெற்றிப் படம் கொடுக்கவில்லை என்ற ஏக்கம் மட்டுமே இருந்தது கிருஷ்ணாவிற்கு. அஜித்திற்கே இரண்டு ப்ளாக் பஸ்டர்கள் கொடுத்த அண்ணன் விஷ்ணு வர்தன் இயக்கியே கூட யட்சனும் அடி வாங்கியது. ஆனாலும் தன் முயற்சியை விடாமால் போராடிய கிருஷ்ணாவிற்கு பலன் கிடைத்திருக்கிறது.

அவர் நடிப்பில் இன்று வெளியாகியிருக்கும் பண்டிகை படம் பத்திரிக்கையாளர் காட்சியிலேயே பெரும் பாராட்டுக்களை குவித்துள்ளது. படமும் சரி, ஹீரோவாக கிருஷ்ணாவிற்கும் சரி மிகப் பெரிய வெற்றியை பெற்றுத் தந்துள்ள இயக்குனர் பெரோஸ் நிச்சயம் பாராட்டப்பட வேண்டியவர்தான். படத்தைப் பார்த்த பிரபலங்களும் இருவரையும் வாழ்த்தி வருவதால் நிஜமாகவே பண்டிகை கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள் இருவரும்.

You might also like More from author