‘’என்னை அடக்க முடியுமா…?’’ விஜய் சேதுபதிக்கு சவால் விட்ட ஹீரோயின்

ஏகப்பட்ட படங்கள் கைவசம் வைத்திருக்கிறார் விஜய் சேதுபதி. ஏகப்பட்ட படங்களில் நடித்துக் கொண்டும் இருக்கிறார். அவரின் ஏகப்பட்ட படங்கள் ரிலீசுக்கும் ரெடியாகத்தான் இருக்கின்றன. அப்படி ரிலீசிற்கு ரெடியாக இருக்கும் படம்தான் கருப்பன். ரேணிகுண்டா, ‘18 வயசு படங்களின் இயக்குனர் பன்னீர் செல்வம் இயக்கியிருக்கிறார். ஏ.எம்.ரத்னம் தயாரித்துள்ளார். இந்தப் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக பிருந்தாவனம் ஹீரோயின் தன்யா நடித்துள்ளார்.

படத்தின் கதைப்படி ஜல்லிக்கட்டு வீரரான விஜய் சேதுபதி ஊருக்கே அடங்காமல் சுற்றிக் கொண்டிருப்பவராம். ஆனால் இவரின் மனைவியாக வரும் தன்யா விஜய் சேதுபதியே கண்டு பயப்படும் வாயாடியாக முரட்டுப் பெண்ணாக வருகிறாராம். இவரை எப்படி அடக்கி, ஆள்கிறார் விஜய் சேதுபதி என்பதே கதையாம்.

கதையைக் கேட்டால் நிச்சயம் குடும்ப சகிதமா தியேட்டர்ல கூட்டம் அள்ளும் என்பது மட்டும் உறுதி

You might also like More from author