‘சாமி 2’ கைவிடப்படவில்லை விளக்கம் அளிக்கும் தயாரிப்பாளர் ஷிபு தமீன்ஸ்

சென்னை: இயக்குனர் ஹரி இயக்கத்தில் சியான் விக்ரம் நடிக்கவிருக்கும் ‘சாமி 2’ படம் கைவிடப்பட்டதாக வெளியான தகவலுக்கு தயாரிப்பாளர் ஷிபு தமீன்ஸ் விளக்கமளித்துள்ளார்.

இது குறித்து ஷிபு தமீன்ஸ் கூறுகையில், ‘சாமி 2 படம் கைவிடப்படவில்லை. கடந்த சில மாதங்களாக கதை எழுதும் பணி நடைபெற்று வருகிறது. 2017 ஏப்ரல் மாதம் படத்தை தொடங்க திட்டமிட்டிருக்கிறோம்’ என்று தெரிவித்த்துள்ளார்.

கடந்த 2003ஆம் ஆண்டு ஹரி இயக்கத்தில் சியான் விக்ரம், த்ரிஷா நடிப்பில் வெளியான சூப்பர்டூப்பர் ஹிட் படமான ‘சாமி’ இரண்டாம் பாகமாக உருவாகவிருப்பதாக அண்மையில் அறிவிக்கப்பட்டது. இரண்டாம் பாகத்தை இயக்குனர் ஹரி இயக்கவிருக்கிறார். இப்படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.

தற்போது, 2 படங்களில் நடித்து வரும் விக்ரம், ஜனவரி 2017 முதல் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகவிருக்கும் பெயரிடப்படாத படத்தில் நடிக்கவிருக்கிறார்.

You might also like More from author