‘மெர்சல்’ படத்தின் டப்பிங் வேலையை துவங்கினார் அட்லீ

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்திருந்த ‘தெறி’ படம் அட்லீ கொடுத்த ஓவர் பில்டப்பிற்கு சம்பந்தமே இல்லாமல் இருந்தாலும் வசூல் ரீதியாக படத்தை நல்ல ஹிட் படமாக்கினார் அட்லீ. இதனால் மீண்டும் அட்லீ இயக்கத்தில் ‘மெர்சல்’ படத்தில் நடித்து முடித்துள்ளார் விஜய். இப்படத்தில் விஜய் மூன்று வேடங்களில் நடிப்பதால் காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன் என மூன்று ஹீரோயின்களையும், வடிவேலு, யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன் என மூன்று காமெடியன்களையும் நடிக்க வைத்துள்ளார் அட்லீ. 

இந்நிலையில் ‘மெர்சல்’ படத்தின் ஷூட்டிங்கை முடித்த அட்லீ டப்பிங் வேலைகளை ஆரம்பித்துவிட்டார். புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள KNACK STUDIOS-வில் பூஜையுடன் டப்பிங்கை துவங்கினார்கள். தீபாவளி விருந்தாக வெளிவரவிருக்கிறது ‘மெர்சல்’.

You might also like More from author