கங்குலி ரசிகர்களை கடுப்பேற்றிய கஸ்தூரி

சில வாரங்களுக்கு முன்பு ரஜினிகாந்த்தின் அரசியல் பிரவேஷத்தைப் பற்றி தனது டிவிட்டர் அக்கவுண்டில் நக்கல் ஸ்டேட்மெண்ட் விட்டு ரஜினி ரசிகர்களின் கோபத்திற்கு ஆளானார் கஸ்தூரி. இந்த சர்ச்சையின் காரணமாக ரஜின்காந்தே கஸ்தூரியை வீட்டிற்கு அழைத்து அவரின் அபிப்ராயம் கேட்டார். இதுவே ரஜினி ரசிகர்களை சங்கடப்படுத்தியது.

தற்போது கிரிக்கெட் வீரர் ‘தாதா’ என்றழைக்கப்படும் கங்குலியின் ரசிகர்களை கடுப்பேற்றியிருக்கிறார் கஸ்தூரி. நேற்று கங்குலியின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்துத் தெரிவித்த கஸ்தூரி அதோடு நிறுத்தியிருக்கலாம். ஆனால் ‘’கங்குலி சார்.. நான் உங்களின் தீவிர ரசிகையாக இருந்தேன். உங்களை நேரில் சந்திக்கும் வரை’’ எனக் குறிப்பிட்டு கங்குலி நேரில் அவ்வளவு நன் மதிப்பு இல்லாதவர் போல கருத்துத் தெரிவித்திருப்பதால் கங்குலி ரசிகர்கள் கஸ்தூரியின் மேல் செம காண்டாகிவிட்டனர்.

இனிமேல் கொல்கத்தாவிற்கு போனால் கஸ்தூரியின் நிலைமை அவ்வளவுதான்…

You might also like More from author