ஹீரோயினானார் பிரியதர்ஷன் லிசி தம்பதியின் மகள்

காதல் தம்பதியான இயக்குனர் பிரியதர்ஷனும், ஹீரோயின் லிசியும் சென்ற வருடம் அதிகாரப்பூர்வமாக விவாகரத்து செய்து கொண்டனர். இவர்களின் மகள் கல்யாணி தற்போது ஹீரோயினாக அறிமுகமாகிறார். இவருக்கு ‘இருமுகன்’ படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்த அனுபவம் இருக்கிறது.

தமிழில் எந்த வாய்ப்பும் கிடைக்காததால் மலையாளத்தில் மோகன்லாலின் மகன் அனுபவிற்கு ஜோடியாக ஜீத்து ஜோசப் இயக்கும் ‘ஆதி’ படத்திலும், தெலுங்கில் நாகர்ஜூன் மகன் அகிலுக்கு ஜோடியாக விக்ரம் குமார் இயக்கும் படத்திலும் நடிக்கவுள்ளார். இந்தப் படங்கள் ஹிட்டானபிறகு வழக்கம் போல தமிழ் தயாரிப்பாளர்கள் கோடிக்கணக்கில் சம்பளம் பேசிக் கெஞ்சிக் கூத்தாடி தமிழுக்கு அழைத்து வருவார்கள் என்பது மட்டும் உறுதி.

You might also like More from author

%d bloggers like this: