தனது ரூட்டை மாற்றி வருகிறார் நடிகை திரிஷா!

காதல் படங்களில் நடிப்பதை விட ஆக்ஷன் படங்களில் நடிக்கலாம் என தனது ரூட்டை மாற்றி வருகிறார் நடிகை திரிஷா.

நடிகை திரிஷா ‘கொடி’ படத்தில் தனுஷுக்கு வில்லியாக நடித்துள்ளார். இந்தப் படத்தால் திரிஷாவின் மொத்த இமேஜும் மாற்றிவிட்டது என்று சொல்லலாம். திரிஷா என்றாலே சாப்ட்டான நடிகை , அதிரடிக்கு இவர் செட்டாக மாட்டார் என்றுதான் அவரை ஓரங்கட்டி வைத்திருந்தனர் சில இயக்குனர்கள். அதோடு, ‘நாயகி’ பட போஸ்டரை பார்த்துகூட சிலர் கேலி செய்தனர். ஆனால் ‘கொடி’ படத்தில் அவர் நடித்த கதாபாத்திரம் பல டைரக்டர்களுக்கு அவர் மீது நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

இனிமேல் திரிஷாவால் அதிரடி மற்றும் ஆவேச நாயகியாக நடிக்கமுடியும் என்று முடிவு செய்தனர். இதன்படி தற்போது திரிஷாவை ‘மோகினி’, ‘சதுரங்கவேட்டை-’2, ‘கர்ஜனை’, ‘96’ ஆகிய படங்களில் அதிரடி வேடங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளனர். .மேலும் திரிஷா, இனிமேலும் நாயகனுடன் மரத்தைச் சுற்றி காதல் டூயட் பாடும் கேரக்டரை தவிர்த்து வருகிறார்.

சாப்ட்டான கதையை சொல்ல வரும் சில டைரக்டர்களிடம் அந்த மாதிரி கதைகளுடன் என்னை இனிமேல் யாரும் தேடி வராதீர்கள் என்று கூறிவிட்டாராம் திரிஷா. மேலும் பாலிவுட் நடிகைகள் வித்யாபாலன், பிரியங்கா சோப்ரா போன்ற நடிகைகள் நடித்த சில படங்களை சுட்டிக்காட்டி, இந்த மாதிரியான கதைகளில் நடிக்கவே நான் ஆசைப்படுகிறேன். அதற்கேற்றார்போல் கதையை ரெடி பண்ணி வாருங்கள்’’ என்று கூறி திருப்பி அனுப்பி விடுகிறாராம்.

You might also like More from author