புத்தாண்டில் சிறந்த படங்களை தேடி நடிப்பேன் என சமந்தா பேட்டி

நகரி : புத்தாண்டில் சிறந்த படங்களை தேடி நடிப்பேன் என சமந்தா பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

சமந்தா பேசுகையில், “எனக்கு 2016ல் சிறந்த படங்கள் அமைந்தன. பாராட்டுகளும் கிடைத்தன. தமிழில் எனக்கு தெறி, 24 படங்கள் எனக்கு வித்தியாசமான கதாப்பாத்திரம் மற்றும் நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது.

நான் தெறி படத்தில் மரணமடைவது போன்ற காட்சி இருந்தது. அந்த காட்சிகளை பார்த்து பலர் அழுததாக கூறினார்கள். அது என் நடிப்பிற்கு கிடைத்த விருதாக கருதுகிறேன். திரைப்படங்களில் நான் மிகவும் அழகாக தெரிவிதாக கூறுகின்றனர். ஒரு நடிகர், நடிகை அழகாகவோ அல்லது அழகில்லாமலோ தெரிவதற்கு ஒளிப்பதிவாளர் தான் காரணம்.

எனக்கு மணிரத்தினம் படங்களில் நடிக்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. ஒரு முறை அந்த வாய்ப்பு வந்தும் கைநழுவிப் போனது. புது ஆண்டில் மணி ரத்தினம் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என நம்புகிறேன்.” என்றார்.

கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடிக்க ஆசையா? என்ற கேள்விக்கு, “நல்ல கதை, கதாப்பாத்திரம் உள்ள படங்களில் நடிப்பதே ஆசை. அதோடு கதாநாயகிக்கு முக்கியத்தும் கொடுக்கும் படங்களிலும் நடிப்பேன். ஆனால் அதில் மட்டும் தான் நடிப்பேன் என்று அடம்பிடிக்க மாட்டேன்.

புத்தாண்டில் சிறந்த கதையுள்ள படங்களில் நடிப்பதே எனது புத்தாண்டு சூளுரை.” என கூறியுள்ளார்.

You might also like More from author