மஞ்சு வாரியரை தமிழில் அறிமுகப்படுத்தும் இயக்குனர் அறிவழகன்

தமிழில் ‘ஈரம்’ என்ற திகில் படத்தின் மூலம் அறிமுகமானவர் இயக்குனர் அறிவழகன். படம் வெற்றிப் பெற்றதுடன் இயக்குனராக நல்ல பெயரையும் எடுத்தார் அறிவழகன். ‘வல்லினம்’, ‘ஆறாது சினம்’, ‘குற்றம் 23’ படங்களை இயக்கி முடித்த அறிவழகன் தற்போது புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார்.

அவர் இயக்கிய ‘குற்றம் 23’ படம் போலவே த்ரில்லர் படம் ஓன்றையே இப்போதும் இயக்க முடிவு செய்துள்ளார். இந்தப் படத்தில் நயன்தாராவை நடிக்க வைக்க முயற்சித்த அறிவழகன் அவரின் அதிக சம்பளம் காரணமாகப் பின்வாங்கிவிட்டார். தற்போது மலையாளத்தில் பிரபல நடிகையாக இருக்கும் மஞ்சு வாரியரை ஒப்பந்தம் செய்துள்ளார். மஞ்சு வாரியார் தமிழில் அறிமுகமாகும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like More from author

%d bloggers like this: