‘கொடி வீரன்’ படத்திற்காக பூர்ணாவின் அர்ப்பணிப்பு

திறமை இருந்தாலும் அதற்கேற்ற படங்கள் அமையாமல் போன ஹீரோயின்களில் பூர்ணாவும் ஒருவர். ‘தகராறு’ படத்தில் மிரட்டலான வில்லி வேடத்தில் நடித்தே தன்னை நிரூபித்தவர். ‘சவரக்கத்தி’ படத்திலும் இரண்டு குழந்தைகளுக்கு தாயாகவும் நடித்திருக்கிறார். இந்நிலையில் பூர்ணாவின் சினிமா மீதான காதலையும், அர்ப்பணிப்பையும் மேலும் பறை சாற்றும் வகையில் ஒரு விஷயத்தை செய்திருக்கிறார்.

அதாவது ‘கொம்பன்’ முத்தையா இயக்கி சசிகுமார், விதார்த், மகிமா நம்பியார் நடித்து வரும் ‘கொடி வீரன்’ படத்தில் பூர்ணாவும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இதில் கதையின் முக்கியமான போர்ஷனுக்காக பூர்ணா மொட்டை அடித்துக் கொண்டாராம். இயக்குனர் முத்தையா இந்த விஷயத்தை முதல் முதலாக பூர்ணாவிடம் தயங்கிக் கொண்டே சொன்னபோது எந்தவித தயக்கமும் கொள்ளாமல் கதையின் முக்கியத்தவத்திற்காக உடனே ஓகே சொல்லிவிட்டாராம்

You might also like More from author

%d bloggers like this: