விக்ரமுடன் முதல் முறையாக இணைந்த சிம்ரன்

நான்கு வருடங்களுக்கு முன்பே சூர்யா நடிக்கவிருந்த பின் ட்ராப்பாகிய படம்தான் கௌதம் மேனனின் ‘துருவ நட்சத்திரம்’. தற்போது இப்படத்தில் விக்ரம் நடித்துக் கொண்டிருக்கிறார். முக்கிய வேடத்தில் பார்த்திபன், ரீது வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், ராதிகா சரத்குமார் என பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். இந்நிலையில் இப்படத்தில் சிம்ரனும் கமிட் செய்யப்பட்டுள்ளார்.

உலக நாயகன் கமல்ஹாசன் உள்ளிட்ட பல ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்த சிம்ரன் விக்ரமுடன் மட்டும் நடிக்கும் வாய்ப்பு வரவேயில்லை. இந்நிலையில் ‘துருவ நட்சத்திரம்’ படத்தில் விக்ரமுடன் முதல் முறையாக இணைந்து நடிக்கிறார் சிம்ரன். இதற்கு முன் ‘பிதாமகன்’ படத்தில் மட்டும் ஒரு பாடலில் இருவரும் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

You might also like More from author

%d bloggers like this: