பிஜு தீவில் மூன்று ஹீரோயின்களுடன் ‘பார்ட்டி’ கொண்டாடும் வெங்கட் பிரபு

சூர்யாவை வைத்து இயக்கிய ‘மாசு என்கிற மாசிலாமணி’, கார்த்தியை வைத்து இயக்கிய ‘பிரியாணி’ என இரண்டு தோல்விப் படங்களுக்குப் பிறகு வெங்கட் பிரபு இயக்கிய ‘சென்னை 2௮’ இரண்டாம் பாகம் சுமாரான வெற்றியைப் பெற்றது. இருந்தாலும் அவருக்கு பெரிய ஹீரோக்களிடமிருந்து எந்த அழைப்பும் வரவில்லை. எனவே புதிய படம் ஒன்றை இயக்குகிறார். இந்தப் படத்திற்கு ‘பார்ட்டி’ என்று பெயர் வைத்திருக்கிறார்.

ஜெய், மிர்ச்சி சிவா, ‘கயல்’ சந்திரன், சம்பத் இவர்களுடன் சீனியர் நடிகர்களான சத்யராஜ், நாசர், ரம்யா கிருஷ்ணன் போன்றோரும் நடிக்கிறார்கள். அதே சமயத்தில் கவர்ச்சியில் வெளுத்து வாங்கும் ரெஜினா காசண்ட்ரா, நிவேதா பெத்துராஜ், சஞ்சிதா ஷெட்டி என மூன்று ஹீரோயின்களும் இருக்கிறார்கள். இவர்கள் நடிக்கும் இந்த படத்தை பிஜு தீவில் ஒரே ஷெட்யூலில் முடித்துக் கொண்டு வர முழு முனைப்புடன் ஈடுபட்டிருக்கிறார் வெங்கட் பிரபு.

You might also like More from author

%d bloggers like this: