அஜீத்தைத் தாக்கிப் பேசினாரா சிம்பு – திடீர் சர்ச்சை

ஒரு காலத்தில் தன்னை அஜித் ரசிகராக தீவிரமாகக் காட்டிக் கொண்டவர்தான் சிம்பு. தனது படங்களில் ஒரு காட்சியிலோ, பாடல்களிலோ எப்படியாவது அஜித் புகழ் பாடிவிடுவார். ஆனால் சில மாதங்களுக்கு முன்பு அஜித்தைப் பற்றி அவர் கூறிய கருத்து அஜித் ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தின் ப்ரோமோஷன்களில் ஈடுபட்டு வரும் சிம்பு, மீண்டும் அஜித்தைப் பற்றி கூறிய கருத்து சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. ‘’அஜித்தின் ஓடாத படங்களின் கட் அவுட்டை வைத்து ‘தல’ என்று கத்தியவன் நான். இனி அவர் வளர்ந்துவிட்டார். இனிமேல் அவரைப் பற்றிப் பேசமாட்டேன். ஒரு சிலர் அஜித்தின் புகழை எனது வளர்ச்சிக்குப் பயன்படுத்திக் கொண்டதாக சொல்லுகின்றனர். எனது கடின உழைப்பின் காரணமாக எனக்கென்று ரசிகர் கூட்டம் உள்ளது. மற்றவர்கள் நினைப்பது குறித்து நான் கவலைப்படவில்லை’’ என்று கூறியிருக்கிறார்.

என்னவோ அஜித்தையே இவர்தான் வளர்த்திவிட்டது போல இவர் கூறியிருக்கும் கருத்தால் சிம்பு மீது செம காண்டில் உள்ளார்களாம் அஜித் ரசிகர்கள்.

You might also like More from author

%d bloggers like this: