ஜெயம் ரவி, சிம்பு நேருக்கு நேர் மோதல்

இந்த ஆறுமாத காலத்தில் ‘பாகுபலி’யை தவிர்த்து பெரிய படங்களோ, பெரிய ஹீரோக்களின் படங்களோ ரிலீசாகாமல் இருந்தன. ஆனால் இந்த வார வெள்ளிக்கிழமை முதல் பெரிய படங்கள் கோதாவில் இறங்குகின்றன. இந்த வாரம் (JUNE 23) சிம்பு நடித்த ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’, ஜெயம் ரவி நடித்த ‘வனமகன்’ என இரண்டு படங்கள் நேருக்கு நேர் மோதுகின்றன.

‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தில் தமன்னா, ஸ்ரேயா, சனா கான், விடிவி கணேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார்.

‘வனமகன்’ படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக ஷையிஷா, தம்பி ராமையா மற்றும் பலர் நடித்துள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். விஜய் இயக்கியுள்ளார்.

யார் ஜெயிக்கிறார்கள் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

You might also like More from author

%d bloggers like this: