‘உரு’ – விமர்சனம்

சில வாரங்களாக பேய்ப் படங்கள் வராமல் இருந்தன. தற்போது மீண்டும் அந்த பேய்ப் படங்கள் வெள்ளிக்கிழமைகளை ஆக்கிரமித்துவிட்டது போல. இந்த வாரம் ரிலீசாகியிருக்கும் படமும் பேய்ப் படமும் பேய்ப் படம்தான். படத்தின் பெயர் உரு. கலையரசன், தன்சிகா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

 

கதை 

எழுத்தாளரான கலையரசன் மனைவி தன்ஷிகாவுடன் வசித்து வருகிறார். தன்ஷிகா தன் சம்பாத்யத்தால் குடும்பத்தை நடத்துகிறார். இந்நிலையில் கலை எழுதிய புத்தகங்கள் இன்றைய காலத்துக்கு உகந்ததாக இல்லை. அப்படி எழுதிக் கொண்டு வாருங்கள் என சொல்கிறார் பதிப்பாளர். அதற்கான கதை தேடலில் இறங்கும் கலையரசன், மேகமலையில் உள்ள தன் நண்பனின் பங்களாவில் தங்கி கதை எழுதுகிறார். அங்கு சில அமானுஷ்ய விஷயங்கள் நடக்க, அங்கு சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் கொல்லப்படுகிறார்கள். ஏன் கொலை நடக்கிறது? யார் கொலைகளை செய்வது? கலையரசன், தன்ஷிகா உயிர் தப்பினார்களா? என்பதை மிகவும் விறுவிறுப்பாக சொல்லியிருக்கிறார் அறிமுக இயக்குனர் விக்கி ஆனந்த்.

நாயகன் கலையரசன், நாயகி தன்ஷிகா ஆகிய இருவருக்குமே சரிசமமான முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்கள் தான். முதல் பாதி முழுக்க கலையரசனின் ராஜ்ஜியம் என்றால் இரண்டாம் பாதியில் தன்ஷிகா ராஜ்ஜியம் நடத்துகிறார். ஒரு நிஜ எழுத்தாளரின் உணர்வுகளை பிரதிபலித்திருக்கிறார் கலையரசன்.ரத்தம் சொட்ட சொட்ட உழைத்திருக்கிறார் தன்சிகா. மைம் கோபி, டேனியல் உட்பட மற்றவர்களும் சிறப்பாக நடித்திருக்கிறார்.

பிரசன்ன குமாரின் ஒளிப்பதிவு பயத்தை ஏற்படுத்துகிறது. சென்னை நகர சாலைகளாகட்டும், கொடைக்கானலில் இயற்கை எழில் கொஞ்சும் அழகையும் சிறப்பாக காட்சிப்படுத்தியுள்ளார். ஜோஹன் பின்னணி இசை படத்தின் வெற்றிக்கு உதவி புரிந்திருக்கிறது. படத்தில் ஒலிப்பதிவும் அசத்தல்.

முதல் படம் என்றாலும்கூட விக்கி ஆனந்த் ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லரை லாவகமாகக் கையாண்டிருக்கிறார். அதுவும் க்ளைமாக்ஸ் டிவிஸ்ட் செம.

மொத்தத்தில்

 ‘உரு’ – இன்னொரு ‘பீட்சா’. 

You might also like More from author

%d bloggers like this: