“சிங்கப்பூர் ரஜினி” திரைப்பட பூஜை

“சிங்கப்பூர் ரஜினி” திரைப்பட பூஜை 60மற்றும் படப்பிடிப்பு கடந்த மே 28 அன்று , சிங்கப்பூர் செராங்கூன் ரோடு காளியம்மன் கோயிலில் , தொழிலதிபர் திரு சதீஷ் காமெராவை ஆன் செய்ய , தொழிலதிபர் திரு நாவலன் கிளாப் அடிக்க, சிங்கப்பூர் இந்திய கலைஞர் சங்க உறுப்பினர்கள் திரு நளன், திரு ராமசந்திரன் , மற்றும் நடிகர் திரு இளஞ்சொழன், மற்றும் பலர் முன்னிலையில் நடைபெற்றது.


சிங்கப்பூர் ரஜினி திரு முருகேசன் நடித்து தயாரிக்கும் , இத்திரைப்படத்தை அறிவு நிகோனி திரைக்கதை எழுதி இயக்குகிறார், ஒளிப்பதிவு- ஆறுமுகம் , ஸ்டில்ஸ்- குமார் போட்டோஸ் ( சிங்கப்பூர் பகுதி). கபாலி படத்தில் நடித்த ஸ்வாதி சிங்கப்பூர் ரஜினியின் அம்மாவாகவும் , டிவி நடிகை கிருஷ்ணவேணி அம்மாள் அவர்கள்பாட்டியாகவும், மற்றும் மாடல் அழகி ரிஷிகா ஆகியோர் நடித்துள்ளனர். படம் வெளிவந்தவுடன் சிங்கப்பூர் ரஜினி , ஸ்வாதி மற்றும் ரிஷிகா ஆகியோர் ஒரு ரவுண்டு வருவார்கள் என எதிர்பார்க்க படுகிறது. படப்பிடிப்பின் அடுத்த ஷெட்டுள் தமிழ்நாட்டில் மாயவரம் பகுதிகளில் நடைபெற்று வருகிறது. திரு ஆறுமுகத்தின் கேமரா , நிச்சயம் அனைவரின் பாராட்டையும் பெரும் என்பதில் சந்தேகமில்லை.

திரு அறிவு நிகோணியின் திட்டமிட்ட , சாதுர்யமான அதேசமயம் வேகமான இயக்கம் , படப்பிடிப்பில் உள்ள அனைவராலும் பாராட்டப்பட்டது. 2018 இல் மற்றுமொரு வெற்றிப்பட இயக்குனரை கோடம்பாக்கத்தில் பார்க்கலாம்.
2017 டிசம்பர் மாதம் திரைக்கு வரவிருக்கும் இத்திரைப்படம் , 2018ஆம் ஆண்டின் பேசப்படும் ஒரு வெற்றி திரைப்படமாக அமையும் என நம்புவோமாக. – முத்துக்குமார் சிங்கப்பூர்

You might also like More from author

%d bloggers like this: