மலைக்க வைக்கும் சம்பளத்தில் ‘பிக் பாஸ்’ கமல்ஹாசன்

‘சபாஷ் நாயுடு’ படத்தில் முழு ஈடுபாட்டோடு நடித்துக் கொண்டிருந்த கமல்ஹாசனுக்கு ஏற்பட்ட விபத்தால் கால் ஆபரேஷன் செய்ய வேண்டிய நிலைமை வந்தது. ஆறு மாத காலம் கட்டாய ஓய்வும் எடுக்க வேண்டும் என்பதால் ‘சபாஷ் நாயுடு’ படத்தின் பணிகள் நிறுத்தப்பட்டன. இந்நிலையில் அவர் குணமாகி மீண்டு வந்தாலும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எடுத்த நடிவடிக்கையால் விசா கிடைப்பதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. எனவே கமல்ஹாசன் ஒரு பக்கம் ‘விஸ்வரூபம் 2’ படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகளையும், இன்னொரு பக்கம் விஜய் டிவி நடத்தும் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் தொகுப்பாளர் வேலைகளையும் செய்து வருகிறார்.

இந்த ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி ஜூன் 25 ஆம் தேதி ஒளிபரப்பாக உள்ளது. இந்த நிகழ்ச்சிக்காக கமல்ஹாசனுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் சம்பளம் மிகப் பெரிய தொகையாம். இந்த நிகழ்ச்சியை தெலுங்கில் தொகுத்து வழங்கும் ஜூனியர் என்.டி.ஆருக்கே ஒரு எபிசோடுக்கு 5௦ லட்சம் என்றால் கமலஹாசனுக்கு எவ்வளவு சம்பளம் இருக்கும் என்று கற்பனை செய்து பார்த்தாலே தலை சுற்றுகிறது.

 

You might also like More from author

%d bloggers like this: