அன்று அஜித்துக்கு இன்று உதயநிதிக்கு!

அன்று அஜித்துக்கு ஏற்பட்ட ஏமாற்றம் இன்று உதயநிதி ஸ்டாலினுக்கு ஏற்பட்டு இருப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் பரவலாக பேசப்படுகிறது.

தற்போது மூன்று படங்களில் உதயநிதி ஸ்டாலின் நடித்து வருகிறார். இதில் ஒன்றுதான் கவுரவ் இயக்கும் சிகரம் தொடு திரைப்படம். கவுரவ் எப்போதும் தான் நடிக்கும் படங்களில் சிறு கதாபாத்திரத்தில் நடித்து விடுவது வழக்கம். அதேபோல் இந்தப் படத்திலும் உதயநிதிக்கே தெரியாமல் துவக்கத்தில் ஓரிரு காட்சிகளில் நடித்து வந்த கவுரவ், தற்போது பல முக்கிய காட்சிகளில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த விஷயம் உதயநிதிக்கு தெரியாது என்று கோலிவுட் வட்டாரத்தில் கிசு கிசுக்கப்படுகிறது.

இதேபோல்தான் திருப்பதி படத்திலும் நடிகர் அஜித்துக்கும் ஏற்பட்டதாம். இந்தப் படத்தை இயக்கிய பேரரசு அஜித்துக்கே தெரியாமல் சண்டைக் காட்சிகளில் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like More from author