மாஸ் ஹீரோக்களை மிரட்டிய நயன்தாராவின் ஆக்ஷன் அவதாரம்

ஏ. ஆர். முருகதாசின் உதவி இயக்குனரான அஜய் ஞானமுத்து இயக்கிய முதல் படம் ‘டிமாண்டி காலனி’. முதல் படத்திலேயே முத்திரைப் பதித்து கவனம் ஈர்த்தார். தற்போது அவர் அதர்வா, நயன்தாராவை ‘இமைக்கா நொடிகள்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் நயன்தாரா போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.

சில வருடங்களாக மாஸ் ஹீரோக்களோடு டூயட் பாடுவது போலல்லாமல் தானே தனி ஹீரோயினாக நடித்துப் படங்களை வெற்றி பெற வைக்கிறார் நயன்தாரா. ‘மாயா’ படத்தின் அமோக வெற்றியே அதன் சாட்சி. மிகப் பெரிய ஓபனிங் கொடுத்த ‘டோரா’, டீசரிலேயே அசத்தும் ‘அறம்’ என பட்டையைக் கிளப்பி வருகிறார். அதுவும் நேற்று வெளியிடப்பட்ட ‘இமைக்கா நொடிகள்’ படத்தின் டீசரில் நயனின் ஆக்ஷன் சீன்களை பார்த்து மாஸ் ஹீரோக்களே மிரண்டு போயுள்ளார்களாம்.

 

You might also like More from author

%d bloggers like this: