சந்தானத்தை ஆச்சரியத்தில் வாய் பிளக்க வைத்த ஹீரோயின்

‘லொள்ளு சபா’ டிவி காமெடி தொடரில் அறிமுகமாகி, சிம்புவின் ‘மன்மதன்’ படத்தில் காமெடி நடிகராக அறிமுகமாகி, மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்று, தற்போது ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கிறார் சந்தானம். ஹீரோவாக அவர் நடித்த ‘வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்’, ‘இனிமே இப்படித்தான்’, ‘தில்லுக்கு துட்டு’ படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்றாலும் தயாரிப்பாளர், விநியோகஸ்தர்கள், தியேட்டர்காரர்கள் என அனைவருக்கும் திருப்தியான படமாகவே அமைந்தன.

இந்நிலையில் அவர் ‘ஓடி ஓடி உழைக்கனும்’ படத்தில் ‘அனேகன்’ ஹீரோயின் அமைரா டஸ்டருடன் நடித்து வருகிறார். பாடல் காட்சிகளில் மிகவும் கடினமான அசைவுகளில் சந்தானம் திணறும்போது அமைராவோ சர்வ சாதாரணமாக ஆடுகிறாராம். அமைராவின் இந்த நடனத் திறமையை பார்த்து வியந்த சந்தானம் அமைராவை ஸ்பாட்டிலேயே நேரடியாகப் பாராட்டினாராம்.

 

You might also like More from author