‘’குவாட்டர் என்றால் என்ன…?’’ – கேட்கும் பிரபல ஹீரோவின் ஆறு வயது மகன்

நடிகர் ஜீவாவின் நடிப்பில் இன்று வெளிவந்திருக்கும் படம்தான் ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’. இந்தப் படம் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளார் ஜீவா. இந்தப் படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில் பிசியாக இருப்பவரிடம், ‘’உங்களுக்கு வெற்றிப் படமாக அமைந்த ‘சிவா மனசுல சக்தி’ படத்தில் வருவது போல ‘’மச்சி ஒரு குவாட்டர் சொல்லே…”’ என்ற டயலாக் இன்றுவரை பிரபலமாக உள்ளதே…!’’ எனக் கேட்டதற்குப் புலம்பித் தள்ளிவிட்டார் மனிதர்.

‘’அந்த டயலாக்கால் என்னை டாஸ்மார்க் அம்பாசிடராக நினைத்துவிட்டார்கள் போலிருக்கிறது. கோவிலுக்கு சாமி கும்பிடச் சென்றால் கூட அந்த டயலாக்கைத் தான் என்னிடம் சொல்கிறார்கள். ஒருவர் அவர் ஏரியாவில் டாஸ்மார்க்கை மூடிவிட்டார்கள் என்பதற்காக என்னிடம் வந்து நியாயம் கேட்க சொல்லுகிறார். இது பரவாயில்லை. ஆறு வயதேயான என் மகன் கூட ‘’டாடி வாட் இஸ் குவாட்டர்’’ என்று கேட்கிறான்’’ என்று கொட்டித் தீர்த்துவிட்டார்.

You might also like More from author