கமலின் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் சூர்யா

விஜய் டிவி நடத்தப் போகும் ‘பிக் பாஸ்’ போட்டி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போகிறார் கமல்ஹாசன். இந்த நிகழ்ச்சி ஏற்கனவே ஹிந்தியில் பிரபலமானாலும் தமிழில் ஈர்க்காது என்றே நினைத்துக் கொண்டிருந்தனர். ஆனால் நிகழ்ச்சித் தொகுப்பாளர் உலக நாயகன் கமல்ஹாசன் என்றதும் இந்தப் போட்டியை காண மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர் மக்கள்.

இந்நிலையில் ஜூன் மாதம் 18-ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகப் போகும் இந்த நிகழ்ச்சியில் முதலில் 15 பிரபலங்கள் கலந்துகொள்ள உள்ளனர். நடிகர் சூர்யா டிவிட்டரில், ‘’கமல் சார், நீங்கள் நடத்தும் பிக் பாஸ் நிகழ்ச்சியை காண ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறேன்’’ என கூறியிருக்கிறார். அனேகமாக முதல் 15 பிரபலங்களில் சூர்யாவும் ஒருவராக இருக்கலாம் என்ற தகவல் உலவுகிறது.

You might also like More from author

%d bloggers like this: