ரஜினியை வரவேற்கும் மாதவன்

0

கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக அரசியலுக்கு வருவதாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த ரஜினிகாந்த் முதல் முறையாக தனது அரசியல் பிரவேஷம் பற்றி வாய் திறந்தார். இரண்டு நாட்களுக்கு முன்பு தனது ரசிகர்களை சந்தித்து போட்டோ எடுத்துக் கொள்ளும் நிகழ்வில்தான் இந்த விஷயத்தை அறிவித்தார். ஆனால் ரஜினியின் இந்த அறிவிப்பிற்கு சமூக வலைத்தளங்களில் பயங்கர எதிர்ப்பும், கொஞ்சம் ஆதரவும் இருந்து வருகிறது.

இந்நிலையில் ரஜினியின் அரசியல் வருகையை வரவேற்றுள்ளார் நடிகர் மாதவன். ‘’ரஜினிகாந்த் மிகவும் பொறுப்பானவர். அவர் அரசியலுக்கு வருவது நல்லது. அப்படி அவர் அரசியலுக்கு வந்தால் தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லது செய்வார்’’ என்று உறுதி கூறினார் மாதவன்.

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.