விஜய் முருகதாஸ் படத்தைத் தயாரிக்கும் ‘சன் பிக்சர்ஸ்’

0

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த ‘துப்பாக்கி’, ‘கத்தி’ என இரண்டு படங்களுமே ப்ளாக் பஸ்டர் ஹிட்டுக்களாகின. இந்நிலையில் இந்த கூட்டணி மீண்டும் இணையவிருக்கிறது. அட்லீ படத்தை முடித்துவிட்டு விஜயும், ‘ஸ்பைடர்’ படத்தை முடித்துவிட்டு முருகதாஸும் மீண்டும் இணைகின்றனர்.

இந்தப் படத்தை முதலில் தயாரிப்பதாக இருந்த நிறுவனம் லைக்கா. ஆனால் முருகதாஸின் சம்பளமே முப்பது கோடிகள் என்பதால் பின்வாங்கிவிட்டது லைக்கா. இதனால் இந்தப் படத்தை தயாரிக்க முன்வந்துள்ளது சன் பிக்சர்ஸ் நிறுவனம். ஆறு வருடங்களுக்குப் பிறகு மீண்டும் சினிமாவில் களமிறங்குகிறது சன் பிக்சர்ஸ்.

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.