‘சாமி’ கூட்டணியை காலி பண்ணிய ‘சிங்கம் 3’

‘சேது’, ‘தில்’, ‘காசி’, ‘ஜெமினி’, ‘தூள்’ என வெற்றிக் கொடி கட்டிப் பறந்த விக்ரமின் வெற்றிப் பயணத்தில் ‘சாமி’ படம் ஒரு வைர மகுடம். இந்தப் படத்தை ஹரி இயக்கியிருந்தார். படத்தின் வேகமான திரைக்கதையும், ஹாரிஸ் ஜெயராஜின் பாடல்களும், தெறிக்க விட்ட பின்னணி இசையும் படத்தை மெகா ஹிட்டாக்கின. இந்நிலையில் ‘சாமி’ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கப் போகிறார் ஹரி.

இந்த அறிவிப்பை ‘இருமுகன்’ விழாவில் ஹரியே உறுதிப்படுத்தினார். அப்போது இசை ஹாரிஸ் ஜெயராஜ் என்று குறிப்பிட்டார். ஆனால் சமீபத்தில் ஹரியின் ‘சிங்கம் 3’ படத்தின் தோல்விக்கு முக்கியக் காரணம் ஹாரிஸ் ஜெயராஜின் இசை தான் என்று ஹரி நம்பிவிட்டாரோ என்னவோ திடீரென ‘சாமி 2’-வில் ஹாரிஸ் ஜெயராஜுக்கு பதில் தேவி ஸ்ரீ பிரசாத்தை ஒப்பந்தம் செய்துவிட்டார் ஹரி.

You might also like More from author