‘’யார்தான் இந்த வாய்ப்பை தவற விடுவார்கள்…?’’ பிக் பாஸான உலக நாயகன்

நூறு ஆண்டுகள் இந்திய சினிமா வரலாற்றில் பாதியான ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் ஆட்சி செய்து வருபவர்தான் உலக நாயகன் கமல்ஹாசன். இத்தனை வருடங்கள் சினிமாவில் இருந்தாலும் சின்னத்திரைக்கு தலைகாட்டியதில்லை. இத்தனைக்கும் எயிட்ஸ் விழிப்புணர்வு விளம்பரத்தில் இலவசமாக நடித்துக் கொடுத்தார். இந்நிலையில் விஜய் டிவியில் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் தொகுப்பாளராக கமிட்டாகியுள்ளார் கமல்ஹாசன்.

‘’கமல் ஏன் சின்னத்திரைக்கு வர வேண்டும்…?’’ என்ற நம் கேள்விக்கு அவரே பதில் கூறியுள்ளார். ‘’சினிமாவை விட டிவியே மக்களிடம் அவர்கள் வீட்டிற்கே நம்மை கொண்டு சேர்க்கிறது. எனக்கும் பணம் தேவையாக இருக்கிறது. நமக்குப் போதுமான பணமும் கொடுத்து, நம்மை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இந்த நிகழ்ச்சியை தவறவிட்டால்தான் ஆச்சரியம். எனவே இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்க சம்மதித்தேன்’’ என விளக்கம் கொடுத்துள்ளார்.

You might also like More from author

%d bloggers like this: