விஜய் சேதுபதி படத்தின் ஹீரோயினாக சமந்தா ஆனால்…

‘கவண்’ வெற்றிக்குப் பிறகு விஜய் சேதுபதி நடித்து வெளிவரவிருக்கும் படங்கள் ஏராளம். இத்தனைக்கும் ‘ரேணிகுண்டா’ பன்னீர் செல்வம் இயக்கிய ‘கருப்பன்’ படத்தையும் நடித்து முடித்துக் கொடுத்துவிட்டார். இந்நிலையில் ‘ஆரண்ய காண்டம்’ புகழ் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் ‘அநீதிக் கதைகள்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் ஹீரோயின் சமந்தா. ஆனால் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக இல்லை என்பதுதான் ட்விஸ்ட்.

இந்தப் படத்தை ஆந்தாலாஜி எனப்படும் ஐந்து குறும்படங்களின் தொகுப்பாகத்தான் தியாகராஜன் குமாரராஜா இயக்கி வருகிறார். இதில் விஜய் சேதுபதி நடிக்கும் போர்ஷன் வேறு படமாகவும் சமந்தா நடித்துள்ள போர்ஷன் வேறு படமாகவும் வருகிறதாம். இதில் சமந்தாவிற்கு ஜோடியாக பகத் ஃபாஸில் நடித்துள்ளார்.

You might also like More from author

%d bloggers like this: