ஸ்டண்ட் மாஸ்டரான டான்ஸ் மாஸ்டர் பிரபுதேவா

0

மணிரத்னம் இயக்கிய ‘அக்னி நட்சத்திரம்’ படத்தில் ‘’ராஜா ராஜாதி ராஜா’’ என்ற பாடலில் ஒரு ஒரத்தில் நின்று டான்ஸ் ஆடிக் கொண்டிருந்தவர்தான் டான்ஸ் மாஸ்டர் சுந்தரத்தின் மகனான பிரபுதேவா. பிறகு ஒவ்வொரு பாடலுக்கு மட்டும் சோலோவாக டான்ஸ் ஆடி, பிறகு ஹீரோவாகி, படிப்படியாக உயர்ந்து, தெலுங்கு, தமிழில் இயக்குநராகி, பாலிவுட்டுக்கு சென்று அங்கும் வெற்றிக் கொடி நாட்டி, பிறகு ‘தேவி’ படத்தில் மீண்டும் நடிக்க வந்துள்ளார் பிரபுதேவா. தமன்னாவின் கிளாமரால் படம் ஹிட்டானது.

இப்போது பிரபுதேவா வரிசையாக படங்களில் நடித்து வருகிறார். அதில் ஒன்றுதான் ‘எங் மங் சங்’. அர்ஜுன் இயக்கும் இப்படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக லக்ஷ்மி மேனன் நடித்து வருகிறார். ரியல் லைஃப்பில் டான்ஸ் மாஸ்டரான பிரபுதேவா இப்படத்தில் ஸ்டண்ட் மாஸ்டராக நடிக்கிறார்.  

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.