சந்தானம் படத்தை நம்பும் தனுஷ் பட ஹீரோயின்

என்னதான் மும்பையில் இருந்து இறக்குமதியானாலும் அழகு மட்டும் இல்லாமல் திறமையும் இருந்தால்தான் தமிழ் சினிமாவில் நிலைக்க முடியும். அதே சமயம் திறமை இருந்தாலும் அதிர்ஷ்டம் இருந்தால்தான் அடுத்தடுத்த வாய்ப்புகளும் கிடைக்கும் என்பதும் உண்மை. அப்படி அழுகும் திறமையும் ஒரு சேர அமைந்த அமைரா டஸ்டர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் ஜோடியாக ‘அனேகன்’ படத்தில் அறிமுகமானார்.

ரங்கூனில் இன்ஸ்பெக்டரின் மகள், எண்பதுகளில் வடசென்னை ஸ்கூல் டீச்சர், நவீன கால ஐ.டி. யுவதி,  என முதல் படத்திலேயே வெவ்வேறு பரிமாணங்களில் நடித்து திறமையை நிரூபித்தார் அமைரா டஸ்டர். ஆனால் படத்தின் ரிசல்ட் மோசமானதாக அமைந்தது. இந்நிலையில் பெரிய ஹீரோக்களின் வாய்ப்புகள் எதுவும் கிடைக்காத நிலையில் சந்தானம் ஜோடியாக ‘ஓடி ஓடி உழைக்கனும்’ படத்தில் நடித்து வருகிறார்.  ‘ஓடி ஓடி உழைக்கனும்’ படம் எப்படியாவது ஓடியே தீர வேண்டும் என்று தவிப்பில் உள்ளார் அமைரா.

 

You might also like More from author

%d bloggers like this: