ரஜினி படத்திற்காக பாகுபலி குழுவை இணைத்துக் கொண்ட ரஞ்சித்

‘கபாலி’ படத்திற்குப் பிறகு மீண்டும் ரஞ்சித் இயக்கத்தில் நடிக்கவிருக்கும் படம் இந்த மாதம் 28-ஆம் தேதி துவங்க இருக்கிறது. இந்தப் படத்தை தனுஷ் தயாரிக்கிறார். ‘கபாலி’ படத்திற்கு ஏகப்பட்ட ஓபனிங் இருந்தாலும் கலவையான விமர்சனங்களே வந்ததால் இந்தப் படத்தை பெரிய அளவில் ஹிட் செய்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் உள்ளார் ரஞ்சித்.

எனவே படத்தில் வரும் சின்ன சின்ன விஷயங்களில் கூட அதிகக் கவனம் செலுத்தி வரும் ரஞ்சித் VFX வேலைகளுக்காக ‘பாகுபலி’ படத்தின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்த பீட்டே ட்ராப்பரின் குழுவைத் தன் படத்தில் இணைத்துள்ளார். ‘பாகுபலி’ அளவுக்கு கிராபிக்ஸ் பணிகள் இந்தப் படத்தில் இல்லாவிட்டாலும் சின்ன சின்ன விஷயங்களில் கூட சிரத்தை எடுத்து வேலை செய்ய உள்ளனர் பீட்டே ட்ராப்பர் குழுவினர்.

You might also like More from author

%d bloggers like this: