‘’ஓவர் நைட்டில் நான் எதையும் சாதிக்கவில்லை’’ – சிருஷ்டி டாங்கே
‘மேகா’ படத்தில் அறிமுகமான சிருஷ்டி டாங்கே அந்தப் படத்திலேயே அற்புதமான நடிப்பின் மூலம் அனைவரையும் கவர்ந்தார். ஹீரோயின், செகன்ட் ஹீரோயின், ப்ளாஷ்பேக் ஹீரோயின், நெகட்டிவ் ஹீரோயின் என பலவிதமான கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறார். இன்று ரிலீசாகியிருக்கும் ‘சரவணன் இருக்க பயமேன்’ படத்தில் ஆவியாக நடித்திருக்கிறார் சிருஷ்டி டாங்கே.
‘’நிறையப் படங்களில் நெகட்டிவ் கேரக்டர்களில் நடிக்கிறீர்களே…?’’ என்று கேட்பவர்களுக்கு, ‘’நான் ஓவர் நைட்டில் சினிமாவில் வளரவில்லை. ஏழு வருடங்களாக சினிமாவில் கஷ்டப்பட்டு உழைத்து வருகிறேன். மோகன்லால், உதயநிதி ஸ்டாலின் என பெரிய ஹீரோக்களுடன் நடிக்கும் அளவிற்கு வளர்ந்துள்ளேன். இரண்டு, மூன்று ஹீரோயின்கள் படங்களிலும் சரி, நெகடிவ் கேரக்டர்களிலும் நடித்து வந்துள்ளேன். அது எனக்கு தவறாக தெரியவில்லை. எந்த கேரக்டர்களில் நடித்தாலும் நான் சிறப்பாக நடித்துள்ளதால்தான் எனக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் வருகிறது’’ எனக் கொஞ்சம் காட்டமாகவே கூறியிருக்கிறார் சிருஷ்டி டாங்கே.