‘பாகுபலி’யால் அசைக்க முடியாத ‘ப.பாண்டி’யின் அமோக வெற்றி

0

நடிகர், பாடல் ஆசிரியர், பாடகர், தயாரிப்பாளர் எனப் பன்முக திறமை கொண்ட தனுஷ் நடிகராகவும், தயாரிப்பாளராகவும் தேசிய விருது வாங்கும் அளவிற்கு தன்னை நிரூபித்துவிட்டார். தற்போது இயக்குனர் அவதாரமும் எடுத்து ‘ப.பாண்டி’ படத்தை இயக்கினார். தமிழ் புத்தாண்டு அன்று வெளியான இப்படம் ஆறிலிருந்து அறுபது வயது முதல் உள்ள அனைவரையும் கவர்ந்து அதிரி புதிரி ஹிட்டானது.

இந்நிலையில் ‘பாகுபலி 2’ ரிலீஸாகி ஆயிரம் கோடி வசூலை குவித்துள்ளது. ‘பாகுபலி’யின் வெற்றி ‘ப.பாண்டி’யின் ஓட்டத்தைப் பாதிக்கும் என திரையுலகினர் நினைத்துக் கொண்டிருந்தனர். ஆனால் ‘ப.பாண்டி’யை அசைக்கக் கூட முடியவில்லை ‘பாகுபலி’யால். படம் ரிலீஸாகி 25 நாட்களாகியும் ‘ப.பாண்டி’ படத்திற்கு மக்கள் கூட்டம் வந்துகொண்டுதான் உள்ளது. ‘’இந்த வருடத்தில் குறைந்த பட்ஜெட்டில் நிறைய லாபம் பெற்றுத் தந்த படம் ப.பாண்டிதான்’’ என திரையுலக வட்டராங்கள் கூறுகின்றன.

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.