முதல் முதலாக செய்யும் ‘அந்த’ விஷயத்திற்குப் பயப்படும் மஞ்சிமா மோகன்

கேரளத்து விஜய் சேதுபதி நிவின் பாலி ஜோடியாக ‘ஒரு வடக்கன் செல்ஃபி’ படத்தில் அறிமுகமானவர் மஞ்சிமா மோகன். அந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டாக, கௌதம் வாசுதேவ் மேனன் தனது ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக தமிழில் அறிமுகப்படுத்தினார். அந்தப் படத்தில் சிம்புவுடன் உதட்டோடு உதடு முத்தக் காட்சியில் நடித்து ரசிகர்களுக்கு பரவசத்தை ஏற்படுத்தினார்.

இந்நிலையில் அவர் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் ‘சத்ரியன்’ படத்திலும், உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக ‘இப்படை வெல்லும்’ படத்திலும் நடித்து வருகிறார். ‘அச்சம் என்பது மடமையடா’, ‘சத்ரியன்’ என இந்த இரண்டு படங்களிலும் செய்யாத ஒரு விஷயத்தை ‘இப்படை வெல்லும்’ படத்தில் செய்யப்போவதை நினைத்து மிகவும் பயந்து போய் உள்ளாராம். அது குத்துப் பாட்டுக்கு டான்ஸ் ஆடுவதுதான். அவருக்கு டான்ஸ் என்றாலே அலர்ஜியாம். தனது குண்டு உடலால் அவ்வளவு வேகமாக டான்ஸ் ஆட முடியாது என்பதால்தான் பயப்படுகிறாராம். ஆனாலும் சிறப்பான டான்ஸை வெளிப்படுத்தவும் டான்ஸ் பயிற்சி எடுத்து வருகிறாராம்.

You might also like More from author

%d bloggers like this: