அட்லீயின் லக்கி சென்டிமென்டான கமல்ஹாசன்

உலக நாயகன் கமலஹாசனுக்கு சென்டிமென்டில் நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ தற்போது அவரையே சென்டிமென்டாக நினைத்துக் கொண்டிருக்கிறார் இயக்குனர் அட்லீ. அவர் முதல் முதலாக தயாரித்து வெளிவரவிருக்கும் படம்தான் ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’. இந்தப் படத்தின் பாடல்களை வெளியிடுபவர் கமல்ஹாசன். பொதுவாக அனைத்து மேடைகளிலும் ‘’நான் ரஜினியின் ரசிகன் என்றுதானே அட்லீ சொல்லிக் கொண்டிருப்பார். அப்புறம் ஏன் ரஜினியை விட்டு கமலிடம் வந்தார்…?’’ என்ற கேள்விக்கு இதுதான் பதில்.

படத்தின் இயக்குனர் கமலின் உதவியாளர் என்பது மட்டுமில்லை. அட்லீ முதல் முதலாக இயக்கிய ‘ராஜா ராணி’ படத்தினை கிளாப் அடித்துத் துவக்கி வைத்ததே கமல்தான். அந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. அந்தப் படத்தின் நூறாவது நாள் விழாவில் முதன்மை விருந்தாளி கமல்தான். எனவே கமலை தன் லக்கி சென்டிமென்டாக நினைத்த அட்லீ தன் தயாரிப்பில் முதல் படமான ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’ படத்தின் பாடல்களையும் கமல் மூலமே வெளியிடுகிறார். அப்போ படம் சூப்பர் ஹிட்தான்.

You might also like More from author