கலையரசனுக்கு கமர்ஷியல் வெற்றி கொடுக்குமா ‘எய்தவன்’

‘முகமூடி’ மற்றும் சில படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்த கலையரசன் ‘மதயானைக் கூட்டம்’, ‘மெட்ராஸ்’ படங்களில் முக்கிய வேடங்களில் முத்திரை பதித்து ஹீரோவாகவே ஆகிவிட்டார். ஆனால் அவர் இதுவரை ஹீரோவாக நடித்த படங்களில் ஒன்றுகூட ஒரு முழுமையான வெற்றிப் படமாக அமையவில்லை. ஆனால் அந்தக் குறையைப் போக்கி, கலையரசனுக்கு ஒரு கமர்ஷியல் ஹிட்டாக அமையும் என்று எதிர்பார்க்க வைத்திருக்கும் படம்தான் ‘எய்தவன்’.

இந்தப் படத்தை இயக்கியுள்ள அறிமுக இயக்குனரான சக்தி ராஜசேகரன், ‘’இந்தப் படம் கல்வித் தந்தைகளின் முகமூடிகளைக் கிழிக்கும். கல்வி என்பது ஏழைகளுக்கு மட்டுமில்லை வசதியனவர்களுக்குக் கூட பெரிய பிரச்சினையாக இருக்கிறது என்பதுதான் உண்மை. இந்தக் கருவை அடிப்படையாக வைத்துதான் ஒரு பக்கா கமர்ஷியல் பேக்கேஜூடன் திரைக்கதை அமைத்துள்ளேன். நிச்சயம் கலையரசனுக்கு ஒரு முழுமையான வெற்றிப் படமாக அமையும் என்பதில் சந்தேகமே இல்லை’’ நம்பிக்கையோடு கூறுகிறார்.

You might also like More from author

%d bloggers like this: