‘’நான் நிஜமாகவே செத்துப் போய்விடுவேன்’’ – பிரபாஸை புலம்ப விட்ட ‘பாகுபலி’

‘’பிரபாஸ் தன் சினிமா வாழ்விலேயே ‘பாகுபலி’ படத்தின் அளவிற்கு மற்றப் படங்களில் அர்ப்பணிப்போடு உழைத்திருப்பாரா…?’’ என்றால் ‘இல்லை’ என்றே சொல்லலாம். நான்கு வருடங்களாக ‘பாகுபலி’ படத்தைத் தவிர அவர் வேறு எதையும் சிந்தனையில் வைக்கவில்லை. இந்த படத்திற்காக கிட்டதட்ட எட்டுப் படங்களை தவறவிட்டார். பிரபாஸின் உழைப்பும் வீண் போகாதவாறு ‘பாகுபலி’யை வரலாற்று வெற்றிப் படமாக்கினார் இயக்குனர் ராஜமௌலி.

தற்போது ‘பாகுபலி’ இரண்டாம் பாகம் இந்த மாதம் ரிலீசாகப் போவதால் அதன் வெற்றியை மொத்த டீமும் எதிர்நோக்கிக் காத்திருக்கிறது. இந்நிலையில் ரசிகர்கள் இப்போதே ‘’பாகுபலி மூன்றாம் பாகம் வருமா…?’’ என்று கேள்விக் கேட்க, பதறிப் போய்விட்டார் பிரபாஸ். ‘’இன்னொரு பாகுபலியா..? சத்தியமாக நான் செத்தேப் போய்விடுவேன். ராஜமௌலியே மீண்டும் அழைத்தால் கூட நான் நடிக்க சம்மதிக்க மாட்டேன். நான்கு வருடங்களாக ‘பாகுபலி’யாகவே வாழ்ந்துகொண்டிருந்த நான் இப்போதுதான் இயல்பு நிலைக்கு மாறி ரிலாக்ஸாகியுள்ளேன்’’ என்று கையெடுத்துக் கும்பிடுகிறார் பிரபாஸ்.

You might also like More from author