வாழ்த்திய ரஜினி நன்றி சொன்ன சச்சின்

இன்னும் நான்கு நாட்களில் கிரிக்கெட் கடவுளாகக் மதிக்கப்படும் சச்சினின் பிறந்த நாள் வருவதால் அவரது ரசிகர்கள் இப்போதே ஏகக் கொண்டாட்டத்திற்குத் தயாராகிவிட்டார்கள். ஆனால் அந்த கொண்டாட்டம் அடுத்த மாதம் இன்னும் பல மடங்காகப் போகிறது. காரணம் சச்சினின் வாழ்க்கை வரலாற்று ஆவணப் படமான ‘சச்சின் எ பில்லியன் ட்ரீம்ஸ்’ ரிலீஸாகிறது. ஜேம்ஸ் எர்ஸ்கின் இயக்கியுள்ள இந்தப் படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இந்தப் படத்தின் ட்ரைலரைப் பார்த்துப் பரவசமான நம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சச்சினுக்குத் தன் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். ‘’அன்பிற்குரிய சச்சின் அவர்களுக்கு, ‘சச்சின் எ பில்லியன் ட்ரீம்ஸ்’ படம் வெற்றியடைய வாழ்த்துகிறேன். கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும்’’ என வாழ்த்த, பதிலுக்கு சச்சின் அந்தப் படத்தின் தமிழ் பதிப்பின் ட்ரைலரை ரஜினிக்கு அனுப்பி, ‘’நன்றி தலைவா, படத்தைத் தமிழில் பார்த்து ரசியுங்கள்’’ என்று கூறியுள்ளார்.

You might also like More from author

%d bloggers like this: