‘’தமிழ் மொழி உலக மொழியாக அடையாளம் பெற வேண்டும்’’ – கஸ்தூரியின் ஆசை

அமெரிக்காவில் செட்டிலான நடிகை கஸ்தூரி சில வருடங்களுக்கு முன் இந்தியா வந்தார். அமெரிக்காவில் இருந்தபோது ஆங்கிலம் மட்டுமே பேசியதால் தமிழை ரொம்பவே மிஸ் பண்ணியவருக்கு இந்தியா வந்தபிறகும் சங்கடம். அதுவும் தமிழ் நாட்டில். சமீபத்தில் நுங்கம்பாக்கம் ஹோட்டலுக்கு நண்பர்களுடன் சாப்பிடச் சென்ற கஸ்தூரி அங்கே உள்ள பணியாளர் முதல் முதலாளி வரை ஹிந்தி மொழியிலேயே பேச, கடுப்பாகிவிட்டாராம். ‘’இவ்வளவு வருடங்கள் தமிழ்நாட்டில் இருக்கிறீர்களே.. தமிழ் கற்றுக் கொள்ளக் கூடாதா…?’’ என்று கஸ்தூரி கேட்ட கேள்விக்கு ஹிந்தியிலேயே வெகுக் கிண்டலான பதில் வந்ததாம்.

இதனைக் கண்டு வேதனைப்பட்ட கஸ்தூரி, ‘’உண்மையில் தமிழர்களுக்கே தமிழின் அருமை புரியவில்லை. ‘தமிழ் தமிழ்’ என்று பேசுபவர்களே தமிழை வைத்து அரசியல்தான் பேசுகிறார்கள். நான் ஹிந்தி மொழிக்கு எதிரி இல்லை. ஆனால் ஹிந்தித் திணிப்புக்கு எதிரி. அதே சமயத்தில் எதற்காகக் தமிழை முடக்க முயற்சி செய்ய வேண்டும்.

எனக்கு ஒரு ஆசை. எல்லா மொழிகளையும் தெரிஞ்சவனா தமிழன் இருக்கணும். அதே சமயம் மற்ற மொழி பேசறவனையும் தமிழ் பேசறவனா மாத்த வைக்கணும். தமிழ் மொழி ‘இந்திய மொழி’ என்ற நிலை மாறி அது ‘உலக மொழி’ என்று அடையாளம் பெற வேண்டும். அப்போதுதான் தமிழனுக்கு கெத்து’’ என்றுப் பொங்குகிறார் கஸ்தூரி.

You might also like More from author

%d bloggers like this: