ஆறு வருடங்களுக்குப் பிறகு வெற்றிக் கொண்டாட்டத்தில் கே.வி.ஆனந்த்

தேசிய விருது ஒளிப்பதிவாளராக இருந்து இயக்குனராக மாறியவர் கே.வி.ஆனந்த். ‘கனா கண்டேன்’, ‘அயன்’, ‘கோ’ என ஹாட்ரிக் ஹிட் படங்களை இயக்கி, ஷங்கர், முருகதாஸ், கெளதம் வாசுதேவ் மேனன் என ‘மாஸ் கமர்ஷியல் டைரக்டர்ஸ்’ லிஸ்டில் இடம் பிடித்தார். ஆனால் அதன்பிறகு அவர் இயக்கிய மாற்றானும், அனேகனும் தோல்விப் படங்களாக அமைந்து சரக்கென்று வெற்றிப் படிக்கட்டுக்களில் இருந்து பல படிகள் கீழிறங்கினார்.

‘கோ’விற்குப் பிறகு அதாவது ஆறு ஆண்டுகளாக ஹிட் கொடுக்காதவர் நிச்சயம் ஹிட் படம் கொடுத்தே ஆக வேண்டிய வெறியில் ‘கவண்’ படத்தை இயக்கினார். விஜய் சேதுபதி, டி.ராஜேந்தர், மடோனா செபாஸ்டின் என வித்தியாசக் கூட்டணி அமைத்து வெற்றியும் பெற்று மீண்டும் மேலே ஏறியுள்ளார். இந்தப் படத்தின் சக்சஸ் பார்ட்டியை தனது டீமோடு கொண்டாடியிருக்கிறார் கே.வி.ஆனந்த். இந்தப் பார்ட்டியில் விஜய் சேதுபதி, விக்ராந்த், இசையமைப்பாளர் ஆதி, கிரண், ‘நண்டு’ ஜெகன் மற்றும் பலர் கலந்துகொண்டு உற்சாகமடைந்துள்ளனர்.

You might also like More from author

%d bloggers like this: