படம் ரிலீஸாகும் முன்பே வெற்றிக் கூட்டணியான அருள்நிதி ராதாமோகன்

0

பொதுவாக திரை உலகில் ஒரு படம் மிகப்பெரிய வெற்றியடைந்தால் அந்த இயக்குனரும், ஹீரோவும் வெற்றிக் கூட்டணிகளாக அறிவிக்கப்பட்டு அடுத்தடுத்த படங்களில் அந்த இயக்குனரும், ஹீரோவும் மீண்டும் மீண்டும் இணைந்து பணியாற்றுவார்கள். இது எந்த மொழி திரையுலகினருக்கும் பொருந்தும். ஆனால் ஒரு படத்தில் முதல் முறையாக இணைந்து பணியாற்றிவிட்டு, அப்படம் வெளிவருவதற்கு முன்பே மீண்டும் அந்த இயக்குனரின் படத்தில் ஒரு ஹீரோ நடிக்கவிருப்பது திரையுலகை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

தற்போது ராதாமோகன் இயக்கத்தில் ‘பிருந்தாவனம்’ என்ற படத்தில் நடித்து வரும் அருள்நிதி ராதாமோகனின் சிறப்பான இயக்கத்தால் கவரப்பட்டு மீண்டும் அவர் இயக்கத்திலேயே நடிக்க முடிவெடுத்திருக்கிறாராம். ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படத்தில் நடித்து வரும் அருள்நிதி இந்தப் படம் முடிந்தவுடன் ராதாமோகன் படத்தில் நடிக்க உள்ளாராம்.

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.