‘’சினிமாவில் நாம் நினைப்பதெல்லாம் நடந்துவிடாது’’ – தமன்னா தத்துவம்

0

கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் தனது அசாத்திய திறமையாலும், அசர வைக்கும் கவர்ச்சியாலும் கொடி கட்டி பறந்து வருகிறார் தமன்னா. ஹிந்தியிலும்கூட நடித்து வருகிறார். தற்போது சிம்புவுடன் ‘அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’, விக்ரமுடன் ‘ஸ்கெட்ச்’ என பிஸியாக நடித்து வரும் தமன்னா சினிமாவில் ஜெயிக்க திறமை மட்டுமே போதாது’’ என்கிறார்.

‘’சினிமாவில் மேலே இருப்பவர் கீழே வருவதும், கீழே இருப்பவர் மேலே வருவதும் சகஜம். எனவே நமக்கான வாய்ப்புக்கள் எப்படியிருந்தாலும் நம்மைத் தேடி வரும். அப்போது நாம் திறமையுடன் நடித்து, கஷ்டப்பட்டு உழைத்து அந்த வாய்ப்பைப் பற்றிக் கொண்டு நம்மை நிரூபிக்க வேண்டும். சினிமாவில் நாம் நினைத்த கேரக்டர்களிளெல்லாம் நடிக்க முடியாது. கிடைக்கின்ற கேரக்டர்களை சிறப்பாக செய்தால்தான் சினிமாவில் நமக்கென்று ஒரு இடம் கிடைக்கும். நான் மற்றவர்களை பார்த்துப் பொறாமைப்பட மாட்டேன். அதே சமயத்தில் வாய்ப்புக் கிடைக்கவில்லை என்றால் வருத்தப்படவும் மாட்டேன். கிடைக்கும் வாய்ப்புகளில் கவனம் செலுத்துவேன்’’ என்று சினிமாப் பிரசங்கமே நடத்துகிறார் தமன்னா.

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.