விஜய் சேதுபதியுடன் மீண்டும் இணைந்த நயன்தாரா

0

விஜய் சேதுபதியும் நயன்தாராவும் இணைந்த நடித்த ‘நானும் ரவுடிதான்’ படம் அதுவரையிலான விஜய் சேதுபதி படங்களின் வசூல் சாதனையை முறியடித்துப் பெரிய வெற்றியைப் பெற்றது. இப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கியிருந்தார். தனுஷ் தயாரித்திருந்தார். இந்நிலையில் விஜய் நயன்தாரா கூட்டணி இரண்டாவது முறையாக மீண்டும் இணைந்துள்ளது.

‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ இயக்குனர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் தனது 25ஆவது படமாக விஜய் சேதுபதி நடிக்கும் ‘சீதக்காதி’ படத்தில் நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அதே சமயம் இப்படத்தில் இன்னும் சில முன்னணி ஹீரோயின்கள் நடிக்கவுள்ளார்களாம். மேடைக் கலைஞர்களின் வாழ்க்கைப் பயணத்தை விவரிக்கும் இப்படத்தின் ஷூட்டிங் வரும் 24 ஆம் தேதி தொடங்குகிறது.

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.